Type to search

உழவு இயந்திரம் மூலம் ATM இயந்திரத்தை கொள்ளையிட்ட நபர்கள்!

France France Top Story WORLD

உழவு இயந்திரம் மூலம் ATM இயந்திரத்தை கொள்ளையிட்ட நபர்கள்!

Share
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

பிரான்ஸில், உழவு இயந்திரத்தை பயன்படுத்தி பண வழங்கி இயந்திரத்தை கொள்ளையிட முயற்சித்த மூவர், ஜோந்தாமினர்களால் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். Robber gang tried stole ATM machine France Essonne

இச்சம்பவம், Essonne மாவட்டத்தில் கிட்டதட்ட 7.500 பேர்வரை வசிக்கும் Ballancourt-sur-Essonne எனும் சிறிய கிராமத்திலேயே இடம்பெற்றுள்ளது. சனிக்கிழமை (ஜூலை 7) அதிகாலை 3 மணிக்கு உழவு இயந்திரம் ஒன்றில் வந்த ஐந்து நபர்கள் அங்கு நிறுவப்பட்டிருந்த Crédit Industriel et Commercial (CIC) வங்கியின் பணவழங்கி இயந்திரத்தை திருட முயற்சித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, கடத்தல்காரர்களில் மூவரை Evry பகுதி ஜோந்தாமினர் கைது செய்துள்ளனர். அத்துடன், தப்பி ஓடியுள்ள இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் ரோமேனியா நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இது தொடர்பான விசாரணைகளை Evry பகுதி ஜோந்தாமினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares
Tags: