Type to search

தீயணைப்பு வாகனத்தை திருடி, சமூக வலைத்தளத்தில் திமிராக பதிவிட்ட நபர்கள்!

France France Top Story WORLD

தீயணைப்பு வாகனத்தை திருடி, சமூக வலைத்தளத்தில் திமிராக பதிவிட்ட நபர்கள்!

Share
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

பிரான்ஸ், Jura மாவட்டத்தில் தீயணைப்பு வாகனம் ஒன்றை திருடி, அதை காணொளியாக பதிவிட்டு, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Two robbers stole fire engine- recorded snapchat

Jura மாவட்டத்தின் Fontenu பகுதியில் உள்ள குளம் ஒன்றுக்கு அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு, அதில் ஏறி நின்று காணொளியை படமாக்கி, Snapchat செயலியில் பதிவேற்றியுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று, ஜூலை 1 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. இக் காணொளி சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டதும் பல எதிர்மறையான கருத்துக்கள் பதிவாகியுள்ளன.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அப்பகுதி நகர முதல்வர், ‘பல உயிர் காக்கும் இயந்திரத்தை இதுபோல் தவறாக பயன்படுத்தியமை ஏற்றுக்கொள்ள முடியாது’ என தெரிவித்துள்ளார்.

இக்காணொளியில் தோன்றிய இருவரும், ‘எங்களுக்கு ஒரு வாழ்க்கை தான். நாங்கள் ஆண்கள்!’ என திமிராக கருத்து பகிர்ந்துள்ளமையும் பலரால் கண்டிக்கப்பட்டிருந்தது.

இதுவே முதன்முறையாக, Jura மாவட்டத்தில் நடப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு வாகனம் Mont-sur-Monnet பகுதியில் வைத்து மீட்கப்பட்டதோடு, குறித்த இருவருக்கும் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares
Tags: