Type to search

நண்பர்களுடன் சென்ற சிறுவனுக்கு நடந்த கொடுமை!

France France Top Story WORLD

நண்பர்களுடன் சென்ற சிறுவனுக்கு நடந்த கொடுமை!

Share
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares

பிரான்ஸில், Marne ஆற்றில் நீந்திய 16 வயதுடைய சிறுவன் ஒருவன் பலியாகியுள்ளான். அவனுக்கு அவசர சிகிச்சைகள் வழங்கப்பட்டும், தோல்வியில் முடிந்ததால் உயிர் பிரிந்துள்ளது. 16 year old boy drown Marne lake

இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றதாக அப்பகுதி காவல்துறையினர் வழங்கிய தகவல்களில் இருந்து தெரியவந்துள்ளது. Val-de-Marne இலூடாக ஊடறுக்கும் Marne ஆற்றில் நண்பர்களுடன் சேர்ந்து குறித்த சிறுவன் நீந்தியுள்ளான். அதன்போதே ஆற்றில் மூழ்கியுள்ளான்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த மீட்புப் படையினர், குறித்த சிறுவனை மயக்கமான நிலையில் மீட்டு, அவசர சிகிச்சைகள் கொடுத்துள்ளனர். அத்துடன் இதயத்தை இயங்க வைக்கும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டும் சிறுவனை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.

அச்சிறுவனை மீட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது அதிகாலை 4.30 மணியளவில் உயிரிழந்துள்ளான். குறித்த சிறுவர்கள் குளித்த இடம் தடை செய்யப்பட்ட பகுதி என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares
Tags: