Type to search

ஜனநாயத்துக்கு மேல் நடத்தப்பட்ட படுகொலைக்கு வழங்கிய தண்டப்பணம்!

France France Head Lines WORLD

ஜனநாயத்துக்கு மேல் நடத்தப்பட்ட படுகொலைக்கு வழங்கிய தண்டப்பணம்!

Share
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares

மரீன் லூ பென்னின் Le Rassemblement national கட்சிக்கு இரண்டு மில்லியன் யூரோக்கள் தண்டப்பணமாக அறவிடப்படுவதாக நீதிமன்றத்தால் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அக்கட்சியினை சேர்ந்தவர்கள் நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். Le Rassemblement national party collected public money

மரீன் லூ பென் கட்சியின் மீது ‘கற்பனையான வேலைவாய்ப்பு’ வழங்கியதாக புகாரளிக்கப்பட்டு, வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது 2 மில்லியன் யூரோக்கள் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.

வங்கிகளில் குறித்த கட்சிக்கோ அல்லது மரீன் லூ பென்னுக்கோ நிதி உதவி வழங்கமுடியாது என வங்கிகள் அறிவித்தன. இதனால் பொது மக்களிடம் இப்பணத்தினை சேகரிக்க முற்பட்டுள்ளனர்.

இவர்கள், இதற்கான கோரிக்கையை இணையத்தளம் மூலம் மேற்கொண்டுள்ளனர். அத்துடன் சமீபத்தில் பல வங்கிகள் Le Rassemblement national கட்சியின் பல கணக்குகளை முடக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இது பற்றி செய்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு மரீன் லூ பென், ‘இது ஜனநாயத்துக்கு மேல் நடத்தப்பட்ட படுகொலை’ என தெரிவித்தார்.

மேலும், தற்போது இரண்டு மில்லியன் யூரோக்கள் பணத்தினை நீதிமன்றத்துக்கு செலுத்துவதற்காக நன்கொடைகள் கோரப்பட்டுள்ளன.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares
Tags: