Type to search

உதைப்பந்தாட்ட வீரர்களுக்கு ஆதரவு அளிக்க மக்ரோனின் அதிரடி நடவடிக்கை!

France France Top Story WORLD

உதைப்பந்தாட்ட வீரர்களுக்கு ஆதரவு அளிக்க மக்ரோனின் அதிரடி நடவடிக்கை!

Share
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares

பிரான்ஸுக்கும், பெல்ஜியத்துக்கும் இடையே இடம்பெற உள்ள உலகக்கிண்ண உதைப்பந்தாட்ட போட்டியினை காண, ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் நேரில் செல்ல உள்ளார். Macron visit Russia- support France football team

இந்த அரை இறுதி போட்டி, ரஷ்யாவின் Saint Petersburg மைதானத்தில் இடம்பெற உள்ளது. வாழ்வா சாவா என பரபரப்புக் கொண்ட இந்த அரையிறுதி போட்டியில், பிரெஞ்சு அணிக்கு ஆதரவு அளிக்க ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் நேரில் சென்று போட்டியினை காண உள்ளார். இதுதவிர ஐந்து சிறப்பு விருந்தினர்களையும் அவர் அழைத்துள்ளார்.

இதற்கு முன்னாள் உதைப்பந்தாட்ட வீரர்களான Jean-Pierre Papin மற்றும் Guy Roux ஆகியோரையும், உதைப்பந்தாட்ட பயிற்சியாளர் AJ Auxerreயும் மக்ரோன் அழைத்துள்ளார்.

உதைப்பந்தாட்ட குழுவின் தலைவரான Sylvain Porthault மற்றும் பிரபல பத்திரிகையாளர் Olivier Guez ஆகியோர் உள்ளடங்கலாக ஐவரும், மக்ரோனுடன் போட்டியினை காண செல்கின்றனர். மேலும், இவர்கள் அனைவரையும் விட ஜனாதிபதி மக்ரோனே இளையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், பரிஸில் பலத்த பாதுகாப்பின் கீழ், இராட்சத திரை அமைக்கப்பட்டு உலகக்கிண்ண போட்டியின் இன்றைய ஆட்டம் ஒளிபரப்பப்பட உள்ளது. இதற்காக 1,200 காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares
Tags: