Type to search

பரிஸில் புகையிரத தண்டவாளத்தில் நடந்தால் தண்டனை!

France Head Lines

பரிஸில் புகையிரத தண்டவாளத்தில் நடந்தால் தண்டனை!

Share
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares

பரிஸில், புகையிரத நிலையத்தில் நபர் ஒருவர் நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்குச் செல்ல, தண்டவாளத்தில் இறங்கியுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கியதால் உயிரிழந்துள்ளார். power pass person body whenn cross railway track

இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு பரிஸ் மூன்றாம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. நள்ளிரவு 12.27 மணிக்கு, Arts et Métiers மெற்றோ நிலையத்தில் நபர் ஒருவர் 11 ஆம் இலக்க நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு செல்ல தண்டவாளத்தில் இறங்கியுள்ளார்.

அப்போது அவர் மிக மோசமான மின்சார தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் குறித்த நபரை மீட்டு சிகிச்சை அளித்தனர்.

SAMU மருத்துவர்களால் அவருக்கு இதய துடிப்பு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டார். ஆனால் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, உடலின் சில பாகங்கள் எரிந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பரிஸ் 11 ஆம் இலக்க வழியில் சத்தலே நோக்கி ஒரு மணிநேரம் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares
Tags: