Type to search

3 ஆவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பிரான்ஸ்- கொண்டாடும் ரசிகர்கள் (புகைப்படங்கள் உள்ளே)!

France France Top Story WORLD

3 ஆவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பிரான்ஸ்- கொண்டாடும் ரசிகர்கள் (புகைப்படங்கள் உள்ளே)!

Share
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares

நேற்று பெல்ஜியத்திற்கும், பிரான்ஸிற்கும் இடையே உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதி போட்டிகள் இடம்பெற்றன. இவ் அரையிறுதி போட்டியில் பிரான்ஸ் 1-0 எனும் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. France reach world cup final photoes

France reach world cup final photoes

முதல் அரையிறுதி ஆட்டம் செயின்ட்பீட்டர்ஸ்பர்க் மைதானத்தில் பிரான்ஸ்-பெல்ஜியம் அணிகளுக்கு இடையே நேற்று நள்ளிரவு நடைபெற்றது.

பிரான்ஸ் அணி காலிறுதியில் உருகுவேயையும், பெல்ஜியம் முன்னாள் சாம்பியன் பிரேஸிலையும் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

1998-இல் பட்டம் வென்ற பிரான்ஸ் தற்போது அடுத்த முறையாக பட்டம் வெல்லும் முனைப்பிலும், முதல் முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் பெல்ஜியம் அணியும் மோதுவதால் இந்த ஆட்டத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.

ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணிகளும் விறுவிறுப்பாக ஆட்டத்தில் ஈடுபட்டன. இதன்போது, 18-ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் பிளேய்ஸ் மட்யுடி பெல்ஜிய கோல்பகுதியை நோக்கி அடித்த பந்து குறி தவறிச் சென்றது.

இதற்கிடையே பெல்ஜிய வீரர்கள் கோலடிக்க எடுத்த முயற்சிகளும் பலனளிக்கவில்லை. அதேநேரம், பிரான்ஸ் முன்கள வீரர் ஆலிவர் ஜிராட் பலமுறை பெல்ஜிய கோல் பகுதியில் ஊடுருவி கோலடிக்க முயன்றுள்ளார். ஆனால் முதல் பாதி ஆட்டம் கோலின்றி 0-0 என முடிந்தது.

இரண்டாம் ஆட்டம் தொடங்கியதும் 51ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கிரைஸ்மேன் கார்னர் மூலம் அனுப்பிய பந்தை தலையால் முட்டி அற்புதமாக கோலாக்கினார் சாமுவேல் உதிதி. அதன்பின்னர் பெல்ஜிய வீரர்கள் சமன் செய்வதற்காக பலமுறை முயன்றும் பிரான்ஸ் தற்காப்பு அரணை தகர்க்க முடியவில்லை.

பிரான்ஸ், இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று மூன்றாவது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இதனை நாடு முழுவதிலுமுள்ள நகரங்கள் மற்றும் தெருக்களில் பிரஞ்சு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். France reach world cup final photoes

இது தொடர்பான சில புகைப்படங்கள் கீழே:

France reach world cup final photoes 

 France reach world cup final photoes  France reach world cup final photoes 

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares
Tags: