Type to search

பிரான்ஸில், கணவரின் அடாவடியால் கைக்குழந்தை உட்பட 5 பேர் பலி!

France France Top Story WORLD

பிரான்ஸில், கணவரின் அடாவடியால் கைக்குழந்தை உட்பட 5 பேர் பலி!

Share
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares

Pau நகரிலுள்ள தென்மேற்கு பகுதியிலுள்ள ஒரு குடியிருப்பிலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை, பிரெஞ்சு தீயணைப்பு வீரர்கள் ஒரு கைக்குழந்தை உட்பட 5 பேரின் சடலங்களை மீட்டனர். French family dispute-5 body found including toddler

அந்த குடியிருப்பிலிருந்து வெளிவந்த புகையை அடுத்து அவ்விடத்திற்கு அதே அபார்ட்மெண்டில் வசிக்கும், ஒரு அயல் வீட்டினாரால் காலை 6:40 மணி அளவில் தீயணைப்பு சேவைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

குறித்த அயல் வீட்டார் ஜன்னலின் ஒரு விளிம்பில் ரத்தம் ஓடியதை பார்த்து ஜன்னல் கதவை திறக்க முற்பட்டுள்ளார். ஆனால் அவரால் திறக்க முடியவில்லை என தெரிவித்தார்.

அவர் மேலும் “அந்த வீட்டில் ஒரு பிரெஞ்சு நபர், அவரது ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மனைவி மற்றும் அவர்களது இரண்டு வயதான குழந்தை ஒன்றும் வசிப்பதாகவும், அவ்வீட்டிற்கு ஸ்பெயின் நாட்டிலிருந்து குறித்த மனைவியின் பெற்றோர் வந்திருந்ததாகவும்” தெரிவித்தார்.

“அங்கே ஒரு பெரிய விவாதம் சுமார் 5:00 மணிக்கு தொடங்கியதாகவும் மற்றும் ஒரு குழந்தை அழும் சத்தமும் கேட்டதாகவும்” அவர் கூறினார்.

அங்கே ஒரு இளம் பெண் கழுத்து சுற்றப்பட்டு தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். குறித்த குழந்தை புகையால் மூச்சு முட்டி இறந்துள்ளது. குறித்த பெண்ணின் பெற்றோர்களின் சடலங்களும் அங்கு கிடைத்ததாகவும், இது ஒரு குடும்ப வன்முறைகளால் ஏற்பட்ட கொலை என அறிகுறி தென்படுவதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த நகரின் மேயர் Jean-Paul Brin, “இது குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்டுள்ளதாக உறுதி படுத்தியுள்ளார்.”

மேலும், குறித்த ஸ்பானிஷ் இளம்பெண் ஆசிரியர் எனவும், அவர் சமீபத்தில் அவருடைய கணவரின் வன்முறை தாக்குதல்கள் பற்றி பொலிஸில் புகார் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares
Tags: