Type to search

பிரான்ஸில், காவற்துறையினரால் €100,000 யூரோக்கள் பணம் கொள்ளை!

France France Top Story WORLD

பிரான்ஸில், காவற்துறையினரால் €100,000 யூரோக்கள் பணம் கொள்ளை!

Share
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares

கடந்த ஜூலை 9 ம் திகதி இரவு, 93 வது மாவட்டத்தில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த வியாபாரி ஒருவர், காவல்துறையினர் வேடமணிந்து வந்த கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.€100,000 euro robber France Japan Expo owner

பிரான்ஸில், ஜப்பானிய பொருட்களை காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்படும் Japan Expo கடையின் முதலாளி ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

ஜப்பான் நாட்டு கலாச்சார நிகழ்வு நிறைவுற்ற அடுத்த நாளான ஜூலை 9 ஆம் திகதி இரவு, Villepinte இல் உள்ள Parc des Expositions பகுதியில் இச்சம்பவம் இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அங்கு காவல்துறையினர் வேடமணிந்த ஐந்து கொள்ளையர்கள் காரை நிறுத்தி சுற்றி வளைத்தனர். இவர்களை தவிர மேலும் இரு காவல்துறை உடை அணிந்திருந்த நபர்கள் மோட்டார் வாகனத்தில் நின்றுள்ளனர்.

அந்த கண்காட்சியில் ஜப்பானிய வாள் ஒன்று €100,000 யூரோக்களுக்கு விற்பனையாகியிருந்தது. அந்த பணத்தினை குறித்த வியாபாரி எடுத்துக்கொண்டு வீடு திரும்பும் வழியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அந்த கொள்ளையர்கள், குறித்த ஜப்பான் நாட்டவரைச் சுட்டு கொன்று விட்டு €100,000 பணத்தினை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். இது தொடர்பான விசாரணைகள் அப் பகுதி காவற்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares
Tags: