Type to search

பிரான்ஸின் கனவை நனவாக்க ஈஃபிள் கோபுரத்திற்கு அழைக்கும் முதல்வர்!

France France Top Story WORLD

பிரான்ஸின் கனவை நனவாக்க ஈஃபிள் கோபுரத்திற்கு அழைக்கும் முதல்வர்!

Share
  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares

பரிஸின் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் திரை அமைக்கப்பட்டு, கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அரை இறுதி போட்டி ஒளிபரப்பப்பட்டது. இதில் பிரான்ஸ் வெற்றி பெற்றதால், வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற உள்ள இறுதிப்போட்டிக்காக ஈஃபிள் கோபுரத்தில் திரை அமைக்கப்பட உள்ளது. FIFA quarter final broadcast Eiffel tower

இதனை பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ உறுதிப்படுத்தியுள்ளார். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை Champs de Mars இல், ஈஃபிள் கோபுரத்தில் இராட்சத LED திரை அமைக்கப்பட்டு, இறுதிப்போட்டி காண்பிக்கப்படும்.

Euro 2016 காலிறுதிப்போட்டியினை 90,000 பேர் Champs de Mars இல் அமைக்கப்பட்ட திரையில் கண்டுகளித்தனர். அதேபோன்றதொரு மக்கள் கூட்டத்தினை Champs de Mars இல் மீண்டும் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அங்கு பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அங்கு வரும் அனைவரும் முற்றாக சோதனையிடப்பட்டதன் பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். அத்துடன் பொதிகள், கைப்பைகள் போன்றவை அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நேற்றைய உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின், பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி குரோஷியா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதனால் குரோஷியா அணி, ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் இறுதிப்போட்டியில் பிரான்ஸுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares
Tags: