Type to search

உலக கிண்ண அரையிறுதியில் துப்பாக்கிசூடு!

France France Head Lines WORLD

உலக கிண்ண அரையிறுதியில் துப்பாக்கிசூடு!

Share
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares

செவ்வாய்க்கிழமை இரவு, நீஸ் நகரில் பிரான்ஸ், பெல்ஜியம் இடையே நடந்த அரை இறுதி போட்டிகளை பெரிய திரையில் கண்டுகளித்த ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் கிட்டதட்ட 30 பேர்வரை காயமடைந்தனர். several injured duringg FIFA world cup semi final fireworks

நீஸ் நகரின் cours Saleya பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய திரையில் பலநூறு மக்கள் கூடியிருந்து போட்டியினை கண்டுகளித்து, தங்களது ஆதரவை பிரெஞ்சு அணிக்கு வழங்கியிருந்தனர்.

இந்த போட்டியில் பிரெஞ்சு அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அதை கொண்டாடும் முகமாக கூட்டத்தில் சிலர் பட்டாசு வெடித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. துப்பாக்கி சூடு இடம்பெறுவதாக நினைத்து பலர் சிதறி ஓடியுள்ளனர். இதனால் பலர் கீழே விழுந்தும், கால்களால் மிதிபட்டும் காயமடைந்தனர்.

அருகில் இருந்த உணவகம் ஒன்றுக்குள் ஓடி ஒளிய முற்பட்ட சிலர், அங்கிருந்த மேசைகளில் மோதி காயமடைந்துள்ளனர். இதனால் குவளைகள் உள்ளிட்ட பல பொருட்கள் உடைந்து நொருங்கியுள்ளன. அனைத்து கதிரை, மேசைகள் உடைந்தன.

அங்கு பயங்கரவாத தாக்குதல் தான் இடம்பெறுகிறதென சில நிமிடங்களில் தகவல் பரவியது. காவல்துறையினரின் அறிவிப்பை தொடர்ந்து அங்கு நிலவிய பதட்டம் நிலமைக்குத் திரும்பியது. இந்த சம்பவத்தினால் 30 பேர்வரை காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares
Tags: