Type to search

விளையாடவே தெரியாத பிரான்ஸ் இறுதி போட்டிக்கு தெரிவானது கால்பந்தாட்டத்திற்கே வெட்கக்கேடு!

France France Top Story WORLD

விளையாடவே தெரியாத பிரான்ஸ் இறுதி போட்டிக்கு தெரிவானது கால்பந்தாட்டத்திற்கே வெட்கக்கேடு!

Share
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares

உலக சாம்பியனாகும் கனவுடன் நுழைந்த பெல்ஜியம் அணி அரையிறுதியில் பிரான்ஸுக்கு எதிராக 1-0 என்று தோற்று வெளியேறியது. இந்நிலையில், பெல்ஜியம் கோல் கீப்பர் திபாவ் கோர்ட்வா பிரான்ஸ் வெற்றி பெற்றது கால்பந்துக்கு வெட்கக் கேடு என்று கடுமையாக சாடியுள்ளார். Belgium Goal Keeper Courtois said France victory Football shame

பிரான்ஸ் 1998-ன் பின்னர், சாம்பியன் பெருங்கனவை மீண்டுமொருமுறை தட்டி எழுப்பியுள்ளது. இந்நிலையில் பெல்ஜியம் கோல் கீப்பர் திபாவ் கோர்ட்வா இதற்கு கடும் காட்டமாக தாக்கியுள்ளார்:

இது மிகவும் வெறுப்பான மேட்ச். பிரான்ஸ் வீரர்கள் விளையாடவே இல்லை, கோலிலிருந்து 40 அடி தூரத்தில் 11 வீரர்களையும் நிறுத்தியது. இது என்ன ஆட்டமா?

ஆனால் கிலியான் பாப்பேயை வைத்து எதிர்த்தாக்குதல் முயன்றது, இது அவர்கள் உரிமை. நாங்களும் மிகவும் உள்ளே சென்றுவிட்டோம். அங்குதான் எங்களுக்கும் பிரச்சினைகள் எழுந்துள்ளன.

எங்களை விட சிறந்த அணி வெற்றி பெற்றிருந்தால் கவலையில்லை, ஒன்றுமே ஆடாத பிரான்ஸ், ஒன்றுமேயில்லாத பிரான்ஸ் வெற்றி பெற்றதுதான் வெறுப்பாக இருக்கிறது.

உருகுவேவுக்கு எதிராக காலிறுதியில் ஃப்ரீ கிக்கில், அதுவும் கோல் கீப்பிங் பிழையில்தான் கோல் அடித்தது பிரான்ஸ். பெல்ஜியம் வெற்றி பெறாததும், பிரான்ஸ் வெற்றி பெற்றதும் கால்பந்துக்கு வெட்கக்கேடு” என கோர்ட்வா தெரிவித்தார்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares
Tags: