Type to search

ஜூலை 14, 15 இல் பிரான்ஸில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்!

France France Top Story WORLD

ஜூலை 14, 15 இல் பிரான்ஸில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்!

Share
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares

ஜூலை 14, பிரான்ஸின் தேசிய நாள் நிகழ்வுகள் இடம்பெறுவதற்குரிய ஆயத்தப்பணிகள் இடம்பெற்று வருகின்றன. இதற்காக போர் விமானங்கள் சில பயிற்சியில் ஈடுபடுவதை பரிஸ் மக்கள் காணக்கூடியதாக இருந்திருக்கும். France July 14, 15 security arrangements

சோம்ப்ஸ் எலிசேயில் இடம்பெற உள்ள இந்த வருட இராணுவ அணிவகுப்பில் 4,290 வீரர்கள் கலந்துகொள்கின்றனர். இதுதவிர பீரங்கி உள்ளிட்ட 249 போர் வாகனங்கள், 250 குதிரைகள் போன்றன அணிவகுக்க உள்ளன.

இதுதவிர, விண்ணில் போர் விமானங்களின் வர்ணஜாலமும் இடம்பெற உள்ளது. அத்துடன், 64 விதம்விதமான போர் விமானங்கள், 30 உலங்குவானூர்திகள் வானத்தை வண்ணமயமாக்க உள்ளன. எதிர்வரும் சனிக்கிழமை பரிஸ் முழுவதும் பலத்த பாதுகாப்போடு இந்த நிகழ்வுகள் சோம்ப்ஸ்-எலிசேயில் இடம்பெற உள்ளது.

கடந்த வருடம் அமெரிக்க ஜனாதிபதி பிரான்ஸின் தேசிய நிகழ்வுகளில் கலந்துகொண்டார். இதைத் தொடர்ந்து, இம்முறை ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய ஆசிய நாடுகள் கெளரவப்படுத்தப்பட உள்ளன. இதனால் இரு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்கின்றனர்.

நாளை சனிக்கிழமை தேசிய நாள் நிகழ்வுகளும், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை உலகக்கிண்ண இறுதிப்போட்டியின் நேரடி ஒளிபரப்பு ஈஃபிள் கோபுரத்திலும் இடம்பெற உள்ளதால் பாதுகாப்பு இருமடங்காக பலப்படுத்தப்பட்டுள்ளன.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares
Tags: