Type to search

பிரான்ஸில், காவற்துறை தம்பதியினர் மீது தாக்குதல்!

France France Head Lines WORLD

பிரான்ஸில், காவற்துறை தம்பதியினர் மீது தாக்குதல்!

Share
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    4
    Shares

Seine-et-Marne இல் வைத்து காவல்துறை தம்பதியினரை தாக்கிய இரு சகோதர்களுக்கு நான்கரை வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. Police couples attack case judgement

27 மற்றும் 24 வயதான இரு சகோதரர்கள் இருவருக்கு நான்கரை மற்றும் மூன்றரை வருட சிறைத்தண்டனை நேற்று வழங்கப்பட்டுள்ளது.

ஒரு கிழமைக்கு முன்னதாக விடுமுறை நாளில் கார் ஒன்றில் தங்களது மகளுடன் காவல்துறை தம்பதியினர் வந்துகொண்டிருக்கையில், மற்றொரு காரில் வந்த இரு சகோதர்கள் காவல்துறையினர் இருவரையும் மோசமாக தாக்கியுள்ளனர். அதன் பிறகு ஒரு வாரத்துக்கு பின்னர் அவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தாக்குதல் இடம்பெற்ற அன்று, இச்சம்பத்திற்கு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தனது கண்டனங்களை தெரிவித்ததோடு, குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தார்.

மேலும், சிறைத்தண்டனை வழங்கப்பட்ட சகோதர்களில் ஒருவரான 27 வயதுடைய நபர், இதற்கு முன்னதாக 2014 ஆம் ஆண்டில் ஒருதடவை இது போன்றதொரு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

 

எமது ஏனைய தளங்கள்


  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    4
    Shares
Tags: