Type to search

வீடியோவால் மாட்டிய காவற்துறை அதிகாரி!

France Top Story

வீடியோவால் மாட்டிய காவற்துறை அதிகாரி!

Share
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares

இணையத்தில் வேகமாக பரவிவரும் கண்காணிப்பு கமரா ஒன்றின் காணொளியால், காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். Police officer attack thief shocking video viral

காவல்துறை அதிகாரி ஒருவர் திருடன் ஒருவனை கீழே தள்ளிவிட்டு தாக்குதலில் ஈடுபடுவது போன்ற ஆறு நிமிட காணொளி ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

இது தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. காவல்துறை அதிகாரியால் தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒரு திருடன் எனவும், அவன் காவல்நிலையத்துக்கு வர மறுத்துள்ளான் எனவும், அதனாலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பரிஸ் நீதிமன்றம், தாக்குதலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரியை விசாரணைக்கு அழைத்தது.

அதைத் தொடர்ந்து, குறித்த அதிகாரி நேற்று ஜூலை 12 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான திருடனை பிடிக்கும் விசாரணைகள் மற்றொரு பக்கம் இடம்பெற்று வருகிறது.

குறித்த தாக்குதல் பரிஸ் 17 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான திருடன் ஒரு அகதி எனவும் தெரியவந்துள்ளது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares
Tags: