Type to search

பிரெஞ்சு இளைஞர்கள் செய்த நற்செயல்!

France France Top Story WORLD

பிரெஞ்சு இளைஞர்கள் செய்த நற்செயல்!

Share
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares

நேற்று, ஜூலை 12 ஆம் திகதி, RER A ரயிலிற்குள் நான்காயிரம் யூரோக்களுக்கு மேலான ரொக்கப்பணம் கண்டெடுக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. Youths handover huge amount Cergy-le-Haut police station

Cergy நோக்கி சென்று கொண்டிருந்த RER A ரயிலில், நண்பர்களுடன் பயணித்த சில இளைஞர்கள், ரயில் பெட்டியின் இருக்கைக்கு கீழ் சிறிய பையொன்று இருப்பதை கண்டெடுத்துள்ளனர்.

குறித்த பைக்குள், €4,180 ரொக்கப்பணமும், அதனுடன் சேர்த்த மற்றொரு பொதிக்குள் சில கடன் அட்டைகளும், சில பயணச்சீட்டுகளும் இருந்துள்ளன. அவற்றை கண்டெடுத்த இளைஞர்கள் Cergy-le-Haut இலுள்ள காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

குறித்த ஏழு இளைஞர்களது நற்செயலையும் காவல்துறையினர் பாராட்டினர். அவர்கள், Cergy பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர், குறித்த பை மற்றும் பணத்தின் உரிமையாளர் யார் என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares
Tags: