Type to search

1998 வரலாற்றை பிரான்ஸ் மீண்டும் அடையும்- உலகக் கோப்பை ஒரு பார்வை!

France France Head Lines France Top Story WORLD

1998 வரலாற்றை பிரான்ஸ் மீண்டும் அடையும்- உலகக் கோப்பை ஒரு பார்வை!

Share
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares

கோடிக்கணக்கான ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2018 இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ்-குரோஷியா அணிகள் நாளை ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன. 1998 வரலாறு மீண்டும் திரும்புமா அல்லது புதிய சாம்பியனா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. FIFA world cup final Croatia Vs France

நடந்து முடிந்த அரையிறுதி ஆட்டங்களில் பிரான்ஸ் 1-0 என பெல்ஜியத்தையும், குரோஷியா 2-1 என இங்கிலாந்தையும் வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றன.

பிரான்ஸ் கடந்த 1998-இல் சாம்பியன் பட்டம் வென்றதுடன், 2006-இல் இறுதிச் சுற்றுவரை முன்னேறியது.

தற்போது மூன்றாவது முறையாக பிரான்ஸ் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அதே நேரத்தில் குரோஷியா கடந்த 1998இல் மூன்றாம் இடம்பெற்றது. தற்போது இரண்டாவது முறையாக குரோஷியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

அதே நேரத்தில் நாக் அவுட் சுற்று ஆட்டங்களில் பின்தங்கி இருந்து கூடுதல் நேரத்தில் குரோஷிய அணி அபாரமாக விளையாடி இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

பிரான்ஸின் கோலோ கண்டே தற்காப்பு மிட்பீல்டராக அண்மைக்காலமாக சிறப்பாக விளையாடி வருகிறார். எந்த சோர்வும் இல்லாமல் மைதானத்தில் தொடர்ந்து ஓடி ஆட்டத்தை திசை திருப்புவதில் சிறந்து விளங்குபவர். நடுக்களத்தில் இவரது ஆட்டம் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்.

பிரான்ஸின் சாமுவேல் உதிதி எதிரணியின் வாய்ப்புகளை தடுப்பதில் பாறை போன்று செயற்படுவார். பார்வர்ட் வீரரான சாமுவேலின் ஆட்டத்தை எதிரணியினர் சமாளிப்பது மிகுந்த சிரமமானதாகும்.

அன்டைன் கிரைஸ்மேன்-டொமகேஜ் விடா: பிரான்ஸின் மிகச்சிறந்த பார்வர்ட் வீரரான கிரைஸ்மேன், கடந்த 2 ஆட்டங்களில் கோலடிக்காவிட்டாலும், அவரது ஆட்டம் எதிரணிக்கு மிகுந்த எச்சரிக்கையை ஏற்படுத்தும் வகையில் இருக்கும்.

இறுதி ஆட்டத்தில் சிறப்பாக ஆடி தனது பெயரை நிலைநிறுத்திக் கொள்ள கிரைஸ்மேனுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. அதே நேரத்தில் குரோஷியாவின் தற்காப்பு வீரரான விடா சிறந்த பார்மில் உள்ளார். எதிரணியின் கோலடிக்கும் முயற்சிகளை தடுத்து நிறுத்தி சிறப்பாக செயல்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

பரபரப்பாக நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில், கடந்த 1998 வரலாற்றை பிரான்ஸ் மீண்டும் அடையுமா அல்லது குரோஷியா புதிய உலகக் கோப்பை சாம்பியனாக உருவாகுமா என உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares
Tags:

You Might also Like