Type to search

பிரான்ஸில் தொடர்ந்து இடம்பெறும் மர்மதாக்குதல்!

France France Top Story WORLD

பிரான்ஸில் தொடர்ந்து இடம்பெறும் மர்மதாக்குதல்!

Share
  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares

நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 13) அதிகாலை Essonne இல் துப்பாக்கிச்சூடு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.  France Essonne gun shooting

இச்சம்பவம் Vigneux-sur-Seine பகுதியிலே இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் தனது வீட்டின் முதலாவது தளத்தில் இருந்து, ஜன்னலுக்கால் வீதியில் சென்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

இச்சம்பவம் 1.30 மணியளவில் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் ஐந்தாறு தடவைகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இதற்குரிய காரணம் இதுவரை வெளியாகவில்லை. இத்துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் கொல்லப்பட்டதோடு, மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

அதன்பின்னர், சில மணிநேரங்கள் கழித்து ஆயுததாரியை கைது செய்ய RAiD படையினர் களத்தில் இறங்கினார்கள். குடியிருப்பு வளாகத்தை சுற்றி வளைத்த படையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை கைது செய்தனர்.

கொல்லப்பட்ட நபர் 30 வயதுடையவர் எனவும், காயமடைந்த இருவரும் 20 வயதுடையவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares
Tags: