Type to search

தனது கைக்குழந்தையை கடத்திய நபர் உயிரிழப்பு!

France France Top Story WORLD

தனது கைக்குழந்தையை கடத்திய நபர் உயிரிழப்பு!

Share
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares

ஒன்றரை வயதான குழந்தையை கடத்திய தந்தை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அத்துடன் அந்த குழந்தையை GIGN படையினர் காப்பாற்றியுள்ளனர். France La Roche-l’Abeille father kidnap child

ஜூலை 12 ஆம் திகதி, வியாழக்கிழமை, La Roche-l’Abeille பகுதியில் உள்ள ஒரு குடும்பத்தில் இருந்து GIGN படையினருக்கு அவசர அழைப்பு கிடைத்துள்ளது.

அதில் குழந்தை கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விசாரணைகளை துரித கதியில் GIGN படையினர் மேற்கொண்டனர். இதில், வீட்டுக்குள் நுழைந்து ஒன்றரை வயது மகளை அவளது தந்தை கடத்தி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடத்தப்பட்ட சிறுமியின் தந்தை, அவரது காதலியுடன் அடாவடியாக வீட்டுக்குள் நுழைந்து குழந்தையை கடத்திச் சென்றுள்ளார். அதைத் தொடர்ந்து, தந்தையின் இருப்பிடத்துக்கு சென்ற GIGN படையினர், குழந்தையை பத்திரமாக மீட்டுள்ளனர்.

ஆனால், கடத்தி சென்ற குழந்தையின் தந்தை, உடல் முற்றாக எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தற்கொலையாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்குழந்தையின் பெற்றோர்கள் இருவரும் பிரிந்து வாழுவதாகவும், குழந்தையை காண தந்தையை அனுமதிப்பதில்லை எனவும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை அப்பகுதி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குழந்தையை மீட்கும் போது GIGN படையினரும் சில தீக்காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares
Tags: