Type to search

பிரான்ஸில், மாற்றப்படுள்ள ரயில் நிலையங்கள்!

France France Head Lines WORLD

பிரான்ஸில், மாற்றப்படுள்ள ரயில் நிலையங்கள்!

Share
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares

நேற்றைய தினம் மொஸ்கோவில் இடம்பெற்ற போட்டியில், இரண்டாவது தடவையாக உலகக்கிண்ணத்தை பிரெஞ்சு அணி கைப்பற்றியதைத் தொடர்ந்து, ரசிகர்களின் கொண்டாட்டம், தற்போது வரை தொடர்கிறது. 6 France railway station name changed afterr FIFA

வெற்றியை கொண்டாடும் முகமாக பரிஸில் உள்ள ஆறு தொடரூந்து நிலையங்களின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை ரயில் நிலையங்களுக்குள் நுழைந்த பயணிகளை இந்த பெயர்கள் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இரண்டாம் இலக்க வழி நிலையமான La station Avron நிலையத்துக்கு புதிய பெயராக, Nous Avron Gagné என பெயரிடப்பட்டுள்ளது. Charles de Gaulle நிலையத்துக்கு On a 2 Étoiles என புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.

6 France railway station name changed afterr FIFA

எழுத்தாளர் Victor Hugo பெயருடைய தொடரூந்து நிலையம் தற்போது பிரெஞ்சு உதைப்பந்தாட்ட வீரரின் பெயரையும் இணைத்துக்கொண்டு Victor Hugo Lloris என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Bercy நிலையம் Bercy les Bleus என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. Notre-Dame des Champs எனும் 12 ஆம் வழி தொடரூந்து நிலையம் தற்போது Notre Didier Deschamps எனும் பெயரில் மாற்றம் கண்டுள்ளது.

Champs-Elysées – Clémenceau நிலையத்தின் பெயரை “Deschamps Elysées – Clémenceau” என மாற்றியுள்ளமை மிக சுவாரஷ்யமாக உள்ளது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares
Tags: