Type to search

பிரான்ஸ் ஜனாதிபதியின் கொண்டாட்டம்!

France France Top Story WORLD

பிரான்ஸ் ஜனாதிபதியின் கொண்டாட்டம்!

Share
  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    14
    Shares

பிரான்ஸ் உலக கோப்பையில் குரேசியாவை தோற்கடித்து உலக சாம்பியனானது. பிரான்ஸின் வெற்றியை நேரில் சென்று கண்டுகளித்த ஜனாதிபதி மக்ரோன், அங்கு பிரான்ஸ் வெற்றியீட்டியதும் எழுந்து நின்று ஆர்ப்பரித்து, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். Macron cheers 2018 FIFA world cup

அத்துடன் அவர்களின் உடை மாற்றும் அறைக்கு சென்று வீரர்களுடன் dab செய்து கொண்டாடினார். தான் ஜனாதிபதி என்பதை மறந்து சக ரசிகராக வெற்றியை கொண்டாடியது அனைவரையும் வியக்க வைத்ததுடன், புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

40 வயதான பிரான்ஸ் ஜனாதிபதி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் குரோஷிய ஜனாதிபதி கொலிண்டா கிராபர்-கிற்றாரோவிக் ஆகியோருடன் சேர்ந்து மாஸ்கோவில் இறுதி போட்டியை கண்டுகளித்தார்.

இறுதி விசிலின் பிறகு, உலக கோப்பை வழங்கும் போது, மழை என்பதை கூட கருத்தில் கொள்ளாமல் உதவியாளர் மற்றும் குடை இல்லாமல் Luzhniki உள்ளக ஸ்டேடியத்திற்கு சென்றார். இது அனைவரையும் வியப்புக்குள்ளாக்கியது.

அத்துடன் அவர் உடனே தனது மகிழ்ச்சியை, நன்றி (merci) என டுவிட்டரில் பதிவிட்டார்.

மேலும் பிரான்ஸில் நாடு முழுவதும், எல்லா தெருக்களிலும் பிரான்ஸின் வெற்றி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

அத்துடன் அவர் பிரான்ஸ் வீரர்களை முன்பே சந்தித்ததுடன், புகழ்பெற்ற கோல்டன் உலகக் கோப்பையுடன் வீட்டிற்குத் திரும்பும்படி அவர்களை வலியுறுத்தியுள்ளார்.

அதன்படி வெற்றியடைந்தால், அனைவரையும் அவருடைய மாளிகைக்கு இன்று திங்கட்கிழமை அழைத்து, அங்கு அவர்களை கெளரவிக்க உள்ளார்.

மேலும், இது அவருடைய ஆட்சி காலத்தில் FIFA கால்பந்து போட்டியில் அடைந்த முதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    14
    Shares
Tags:

You Might also Like