Type to search

நவிகோ அட்டையினை 50 வீத விலைக்கழிவுடன் பெறக்கூடியவர்களின் விபரம்!

France France Head Lines France Top Story WORLD

நவிகோ அட்டையினை 50 வீத விலைக்கழிவுடன் பெறக்கூடியவர்களின் விபரம்!

Share
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    2
    Shares

ரயில் தொழிலாளர்களின் பணி பகிஷ்கரிப்பினால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு பயண அட்டையில் 50 வீத விலைக்கழிவை வழங்க SNCF தீர்மானித்துள்ளது. SNCF staff strike-50% discount

நாடு முழுவதும், பணி பகிஷ்கரிப்பால் அதிகளவு பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இந்த நஷ்ட ஈடு வழங்கப்பட உள்ளது. நவிகோ அட்டை மற்றும் Imagine R பயண அட்டை வைத்திருப்பவர்களில், பாதிக்கப்பட்ட பயணிகள் அடுத்த மாத நவிகோ அட்டையில் 50 வீத விலைக்கழிவு பெற்று கொள்ளலாம். அதாவது 25 யூரோக்கள் விலைக்கழிவுடன் கூடிய கட்டணத்தில் நவிகோ அட்டையினை பெற்றுக்கொள்ளலாம்.

அதேவேளை Imagine R பயனாளர்களுக்கு 12.50 யூரோக்கள் விலைக்கழிவுடன் கூடிய அட்டையை பெற்றுக்கொள்ள முடியும்.

R வழி பயணம் மேற்கொள்ளும் அனைவரும் நஷ்ட ஈடு பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் P வழியில், Ferté-Millon இல் இருந்து Longueville-Provins வரை பயணிப்பவர்களும் நஷ்ட ஈடு பெறலாம்.

மேலும், RER D இல் Corbeil இல் இருந்து தெற்கு நோக்கி பயணிக்கும் பயணிகளும், RER E இல் Chelles-Gournay நோக்கி பயணிக்கும் பயணிகளும் நஷ்ட ஈடு பெற்றுக்கொள்ளலாம்.

அத்துடன் N, வழி தொடரூந்தில் Mantes மற்றும் Dreux நகரங்களுக்கு பயணிப்பவர்களுக்கு நஷ்ட ஈடு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நஷ்ட ஈட்டை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் Ile-de-France Mobilités இன் இணையத்தளத்தில் ஜூலை 22 ஆம் திகதிக்குள் தங்கள் விபரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    2
    Shares
Tags: