Type to search

பரிஸில் மகளுடன், ஐஸ்வர்யா செய்த காரியம்!

France France Head Lines France Top Story WORLD

பரிஸில் மகளுடன், ஐஸ்வர்யா செய்த காரியம்!

Share
  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    13
    Shares

பரிஸில் தன் மகள் ஆரத்யா உடன் விடுமுறையை கழித்து வரும் ஐஸ்வர்யா ராய், உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றதையடுத்து பரிஸில் அந்நாட்டு கால்பந்து ரசிகர்களின் வெற்றிக் கொண்டாட்டத்தை நேரடியாக கண்டுகளித்துள்ளார். Aishwarya celebrate France FIFA world cup success

பாலிவுட்டில் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் உருவாகியுள்ள ஃபன்னி கான் எதிர்வரும் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகவுள்ளது. இப்பட வேலைகள் அனைத்தையும் முடித்து விட்ட ஐஸ்வர்யா ராய், தனது மகள் ஆரத்யா உடன் இணைந்து பரிஸில் விடுமுறையை கொண்டாடி வருகிறார். அங்கு அவர், ஈபிள் டவர், டிஸ்னிலேண்ட் உள்ளிட்ட இடங்களுக்கு தன் மகளுடன் சென்றுள்ளார்.

அப்போது, அங்கு அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். டிஸ்னிலேண்டில் உள்ள ரோலர் கோஸ்டரில் ஆரத்யாவுடன் ஐஸ்வர்யா ராயும் அமர்ந்து, குழந்தையோடு குழந்தையாக விளையாடியுள்ளார். அதுமட்டுமின்றி 2018 உலகக்கோப்பையை பிரான்ஸ் அணி கைப்பற்றியதையடுத்து நேற்று பரிஸ் நகரமே விழாக்கோலம் பூண்டது.

இந்த கொண்டாட்டத்தினை பரிஸில் தான் தங்கியிருந்த இடத்திலிருந்து ஜன்னல் வழியாக புகைப்படமெடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் ஐஸ்வர்யா ராய்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    13
    Shares
Tags: