Type to search

பிரான்ஸ் உலக கோப்பை வெற்றிக்கு காரணம் புலம் பெயர்ந்தவர்கள்!

France France Top Story WORLD

பிரான்ஸ் உலக கோப்பை வெற்றிக்கு காரணம் புலம் பெயர்ந்தவர்கள்!

Share
  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares

உலகம் முழுவதும் அகதிகளுக்கு தஞ்சமடைய இடமில்லை என எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில், புலம் பெயர்ந்தவர்களால் உருவான பிரான்ஸ் அணி தான், கால்பந்து போட்டியில் உலக கோப்பையை வென்றுள்ளது. French football team formed refugees

உடமைகள், உரிமைகள் மற்றும் உறவுகளை இழந்து வயிற்று பிழைப்பிற்காக வேறு நாடு செல்லும் மக்களுக்கு, கிடைப்பதோ சிறைச்சாலை தான். அனைத்திற்கும் மேலாக அமெரிக்காவுக்குள் வரும் அகதிகளின் குழந்தைகளை பிரித்து அமெரிக்கா மிகக்கொடூரமாக நடந்து கொண்டு வருகிறது.

ஆனால், 20 ஆண்டுகளுக்கு முன்னர் புலம் பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகளுக்கு தங்கள் நாட்டு கதவை திறந்து விட்ட பிரான்ஸ், அதன் பலனை தற்போது சுவைத்து வருகிறது.

20 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பையை பிரான்ஸ் மீண்டும் வெல்ல உதவியதற்கு முக்கிய காரணம் புலம் பெயர்ந்தவர்கள் மற்றும் அவர்களது வாரிசுகள் தான். தற்போதைய பிரான்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளவர்கள் பெரும்பாலும் ஆப்பிரிக்க நாட்டிலிருந்து வந்தவர்களே.

உலக கோப்பையில் சிறந்த இளம் வீரர் விருதை வென்ற எம்பாப்பேவின் பெற்றோர் அல்ஜெரியா நாட்டிலிருந்து வந்தவர்கள். பிரான்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் போக்பாவுக்கும் பிரான்ஸ் சொந்த நாடே அல்ல.

காண்டே மாலியை சேர்ந்தவர் மற்றும் பிரான்ஸ் அணியின் சாமுவேல் உம்மித்தியின் பூர்விகம் கேமரூன் ஆகும். ஸ்டீவ் மண்டன்டா காங்கோவை சேர்ந்தவர்.

இப்படி புலம் பெயர்ந்தவர்கள் தாங்கள் சென்று வசிக்கும் நாடுகளுக்கு பெருமை சேர்த்து தந்தாலும், உலகின் பல நாடுகள், அவர்களை ஏற்க மறுத்தே வருகின்றன.

பிரான்ஸின் இந்த உலக கோப்பை வரலாறு, அகதிகள் மற்றும் புலன் பெயர்ந்தவர்களின் வாழ்வுக்கு ஒரு நம்பிக்கையை பெற்று தந்துள்ளது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares
Tags: