Type to search

பிரான்ஸில், மழைக்கு ஒதுங்கிய பிரித்தானிய ஜோடிகளுக்கு நடந்த கொடுமை!

France France Head Lines WORLD

பிரான்ஸில், மழைக்கு ஒதுங்கிய பிரித்தானிய ஜோடிகளுக்கு நடந்த கொடுமை!

Share
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    5
    Shares

தெற்கு பிரான்ஸில், மழைக்கு மரத்தின் கீழ் ஒதுங்கி நின்ற பிரித்தானிய ஜோடிகள் மீது மின்னல் தாக்கியுள்ளது. Britain couples affected lightning France

இச்சம்பவம், தெற்கு பிரான்ஸில் உள்ள Villeneuve-de-Berg (Ardeche) எனும் சிறிய கிராமத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. 28 மற்றும் 25 வயதுடைய பிரித்தானிய ஜோடிகள் மீது மின்னல் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

முதலில் வீதியில் தரித்திருந்த உந்துருளி மீது மின்னல் தாக்கியதாகவும், அதன் பின்னர் மரத்துக்கு கீழ் ஒதுங்கி நின்ற குறித்த இருவர் மீதும் மின்னல் தாக்கியுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ் விபத்தில், குறித்த பெண்ணின் மார்பு பகுதி மிக மோசமாக எரிந்துள்ளதாகவும், அப்பெண்ணின் காதலனின் முதுகு பக்கத்தில் தீக்காயம் ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. உடனடியாக இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரான்ஸில், ஒவ்வொரு ஒரு மில்லியன் மின்னலுக்கும் ஒருவர் காயமடைவதாகவும், வருடத்துக்கு 100 இலிருந்து 200 வரையானவர்கள் பாதிப்புக்குள்ளாகின்றார்கள் எனவும், 10 இலிருந்து 20 வரையானவர்கள் உயிரிழப்பதாகவும் அறிக்கை தெரிவித்துள்ளது.

அதேவேளை, கடந்த மே மாதத்தில், இவ்வருடத்தின் அதிகூடிய மின்னல் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் பதிவாகியுள்ளது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    5
    Shares
Tags: