Type to search

உலக சாம்பியன்களின் தலைக்கு மேல் 6 விமானங்கள்???

France France Head Lines WORLD

உலக சாம்பியன்களின் தலைக்கு மேல் 6 விமானங்கள்???

Share
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares

பிரான்ஸில், உலகக்கிண்ண சாம்பியன்களுக்கு திங்கட்கிழமை வரலாறு காணாத அளவு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்கள் ரசிகர்களின் ஆரவாரத்துடன் Avenue des Champs-Elysées இல் ஊர்வலம் வந்தனர். France welcome world cup winners treated heroes

அவர்கள் மாலை 4 மணிக்கு Roissy விமான நிலையத்துக்கு வந்து இறங்குவார்கள் என எதிர்ப்பார்த்திருந்த நிலையில், 4.43 மணிக்கு வீரர்கள் அடங்கிய விமானம் வந்திறங்கியது. குறித்த விமானம் மேல் தண்ணீர் அடிக்கப்பட்டதும், கால் மணி நேரம் கழித்து வீரர்கள் வெளியே இறங்கினார்கள்.

அவர்கள் இறங்கிய உடன் விளையாட்டுத் துறை அமைச்சரும், விமான நிலைய அதிகாரிகளும் வரவேற்றனர். அதன்பின்னர், விமான நிலையத்தில் அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டு, வீரர்கள் அதில் நடனமும் ஆடினார்கள். அதன் பின்னர், Hugo Lloris, உலகக்கிண்ணத்துடன் தோன்ற, ஆரவாரம் விண்ணை முட்டியது.

அதைத் தொடர்ந்து வீரர்கள் புதிய ஆடைகளை அணிந்துகொண்டு அங்கிருந்து பேருந்து ஒன்றில் புறப்பட்டனர். ‘உலக சாம்பியன்கள்’ (Champions du monde) என எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட அந்த உடையை அணிந்துகொண்டு, வீரர்கள் கூரை இல்லாத பேருந்து ஒன்றில் Avenue des Champs-Elysées இல் ஊர்வலம் வந்தார்கள்.

அங்கு குவிந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கத்தி கூச்சலிட்டு ஆர்ப்பரித்தனர். வீரர்கள் ஊர்வலம் வர, அவர்கள் தலைக்கு மேல் மூவர்ண கொடியின் நிறங்களை கக்கிக்கொண்டு ஆறு விமானங்கள் பறந்தது.

நீல நிற பேருந்தில், அனைத்து வீரர்களும் இணைந்து உலகக்கிண்ணத்தை உயர்த்தி காட்டினார்கள். உடனே ரசிகர்கள் கட்டுப்பாட்டை இழந்து கத்தி கூச்சலிட்டனர்.

20 நிமிடங்கள் வரை நீடித்த இந்த ஊர்வலத்தை தொடர்ந்து, வீரர்கள் எலிசே மாளிகையை அடைந்தனர். அங்கு அவர்களுக்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares
Tags:

You Might also Like