Type to search

பலூனில் பறந்து பரிஸை ரசிக்க உங்களுக்கு ஓர் வாய்ப்பு!

France France Head Lines WORLD

பலூனில் பறந்து பரிஸை ரசிக்க உங்களுக்கு ஓர் வாய்ப்பு!

Share
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares

பிரான்ஸின் கோடைகாலத்தை கொண்டாடும் முகமாக பரிஸில் உள்ளவர்களுக்கு புதிய வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இரவு நேர பரிஸ் நகரை பலூனில் பறந்தபடியே ரசிக்கலாம். Watch Paris Parc André-Citroën park

பரிஸ் 15ம் வட்டாரத்தில் உள்ள Parc André-Citroën பூங்காவில், இந்த பலூன்கள் கோடை காலத்தில் ஒவ்வொரு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில், இரவு வேளையில் பறக்கவிடப்பட உள்ளது.

இரவு 9.00 மணிமுதல் 11 மணிவரை இந்த பலூன்கள் பறக்கவிடப்படும். அதில் அனைவரும் ஏறி பரிஸின் அழகை கண்டு ரசிக்கலாம். மொத்தமாக 15 நிமிடங்கள் உங்களுக்கு வழங்கப்படும், அதற்குள் நீங்கள் ‘City of Light’ என அழைக்கப்படும் இரவு பரிஸினை 360° பக்கங்களிலும் கண்டு ரசிக்கலாம்.

ஏற்பாட்டாளர்கள் ‘இரவில் ஜொலிக்கும் ஈஃபிள் கோபுரத்தை ரசிக்க இது மிகச்சிறந்த இடம்!’ என தெரிவித்துள்ளனர். 150 மீட்டர்களுக்கு மேற்பட்ட உயரத்தில் இந்த பலூன்கள் பறக்கும். இதில் பயணிக்க 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு €12 கட்டணமும், 12 வயதுக்குட்பட்டவர்களுக்கு €6 கட்டணமும் அறவிடப்படும்.

இதுதவிர, ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கும் போது, செப்டம்பர் 1ம் திகதி வரை இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சீரான காலநிலை நிலவும் பட்சத்தில் மாத்திரமே இந்த சேவை மேலும் இயங்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares
Tags: