Type to search

பரிஸ் நெடுஞ் சாலையில் ஏற்பட்ட விபத்தில் 10 வயதுக்குட்பட்ட 10 சிறுவர்கள் கவலைக்கிடம்!

France France Head Lines WORLD

பரிஸ் நெடுஞ் சாலையில் ஏற்பட்ட விபத்தில் 10 வயதுக்குட்பட்ட 10 சிறுவர்கள் கவலைக்கிடம்!

Share
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares

சிறுவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்றும், ட்ரக் வகை கனரக வாகனம் ஒன்றும் எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதால் 14 பேர் காயமடைந்துள்ளனர். Paris fatal road accident- 10 children admitted hospital

பரிஸிலிருந்து கோடை விடுமுறைக்காக Mâcon நகருக்குச் சென்றுகொண்டிருந்த குறித்த பேருந்தில் சிறுவர்களும், அவர்களின் பாதுகாவலர்களும் இருந்துள்ளனர்.

குறித்த விபத்து, நேற்று மாலை 3 மணி அளவில் A7 வீதியில் லியோன் நகரை நோக்கி செல்லும் வீதியில் இடம்பெற்றது. இவ் விபத்தில் 10 சிறுவர்கள் உட்பட 14 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் Chalon-sur-Saône மற்றும் Mâcon இலுள்ள மருத்துவமனைக்கு உலங்குவானூர்தியில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

பாரிய அளவில் விபத்து இடம்பெற்றிருந்தாலும் கூட, உயிரிழப்புக்கள் எதுவும் இடம்பெறவில்லை. இதில், 9 தொடக்கம் 14 வரையுள்ள சிறுவர்கள் காயமடைந்துள்ளனர். இதனால், நேற்று மாலை 6 மணி வரை போக்குவரத்து தடைப்பட்டது.

பரிஸில், கோடை விடுமுறை காலம் என்பதால் வீதியில் பல வாகனங்கள் பயணித்து கொண்டிருந்தது. இந்நிலையில் ஏற்பட்ட விபத்தினால் பல கிலோமீட்டர்களுக்கு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares
Tags: