Categories: FranceFrance Top StoryWORLD

பிரான்ஸில் பாலியல் நோய்கள் அதிகரிப்பு- இளைஞர்களே அவதானம்!

2012 மற்றும் 2016 க்கு இடையில் நாட்டில் chlamydia மற்றும் gonorrhoea போன்ற நோய்கள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளன என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதால், பொது மக்களை பாதுகாப்பாக இருக்குமாறும், அடிக்கடி சோதித்து கொள்ளுமாறும் பிரஞ்சு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். relationship transmitted infections triple four years France

பிரஞ்சு பொதுமக்கள் மத்தியில் பாலியல் நோய்த்தாக்கங்கள் (STIs) அதிகரித்து வருகிறது.

பிரதான நோய் கிருமிகளான chlamydia மற்றும் gonorrhoea போன்றவை 2012 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் முதல் இருந்ததை விட மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக பிரெஞ்சு சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

2016 ஆம் ஆண்டில், chlamydia கிருமியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 267,097 என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது 15 வயது அல்லது அதற்கு மேற்பட்ட 100,000 மக்களுக்கு 491 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது.

2012 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 76,918 ஆக இருந்தது, இது 2016 ஆம் ஆண்டின் எண்ணிக்கையின், மூன்றில் ஒரு பங்கிற்கு குறைவாக உள்ளது.

Gonorrhea நோய்த்தாக்கல் மூலம், 2012 ல் 15,067 பேரும், 2016 ல் 49,628 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது, அதாவது 15 வயது மற்றும் 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் 100 000 பேரில் 91 நபர்கள் தொற்றுநோயாளாராக இருந்தனர்.

“இந்த கணக்கெடுப்பானது ஆணுறைகளைப் பயன்படுத்துவது மற்றும் பாதுகாப்பற்ற உடலுறவிற்கு பிறகு வழக்கமான ஸ்கிரீனிங் செய்வதன் முக்கியத்துவத்தையும் விளக்குகிறது” என்று சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Tamil

Recent Posts

பரிஸில், வீட்டை விட்டு வெளியேற பயப்பிடும் பெண்கள்!

பரிஸில் உள்ள நான்கில் ஒரு பெண்ணுக்கு வீட்டை விட்டு வெளியே தனியே வர பயப்படுவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. France Paris women safety report release…

8 hours ago

பிரான்ஸில் காவல் நிலையத்திற்கு அருகே இடம்பெற்ற கத்திக்குத்து… இதுவரை கண்டுபிடிக்கப்படாத கொலையாளி…!

Juvisy-sur-Orge நகர காவல்நிலையத்துக்கு 100 மீட்டர்கள் அருகில் வைத்து நேற்று திங்கட்கிழமை காலை 10 மணி அளவில், நடு வீதியில் நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். France Juvisy-sur-Orge…

20 hours ago

ஜனாதிபதி மாளிகைக்கு இதனை யூரோக்கள் செலவளிக்கப்போகிறார்களாம்…. கொந்தளிப்பில் பிரான்ஸ் நாட்டு மக்கள்!

பிரான்ஸ், எலிசே மாளிகையின் ஒரு பகுதி €500,000 க்கள் செலவில் மீள் நிர்மாணம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. France Elise building reconstruction spending €500,000 ஜனாதிபதி…

1 day ago

பிரான்ஸ் அரசின் அனுமதியுடன் வீட்டில் மிருகக்காட்சி சாலை நடத்தி வரும் நபர்!

வீட்டையே மிருகக்காட்சி சாலையாக மாற்றி வைத்திருக்கிறார் பிரான்ஸில் ஒரு 67 வயது தாத்தா. இந்த தாத்தாவின் வீட்டிற்கு அவர் கூறியது போல அனுமதி இன்றி உள்ளே செல்லக்கூடாதுதான். …

5 days ago

இளம் வாலிபர் நிர்வாண கோலத்தில் வீதியில் நின்று கொண்டு தாக்குதல் நடத்திய சம்பவம்- காவற்துறையினர் மீதும் தாக்குதல்!

நபர் ஒருவர் முழு நிர்வாணமாக நான்கு காவல்துறையினரை தாக்கியுள்ள சம்பவமொன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. ஆனால் இத்தகவல் இன்று வெளியாகியுள்ளது. Nude Person attacked France police இச்சம்பவம், செவ்வாய்க்கிழமை…

6 days ago

பிரான்ஸில் துப்பரவு பணியினால் தொடரும் உயிரிழப்புகள்!

நேற்று திங்கட்கிழமை Yvelines பகுதியில் 40 மீற்றர் ஆழத்தில் துப்பரவுபணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இருவர் பலியாகியுள்ளனர். 2 persons died duringg cleaning works France news திங்கட்கிழமை இரவு…

1 week ago