Categories: FranceFrance Head LinesWORLD

பிரான்ஸ் A13 நெடுஞ்சாலையில், திடீரென தீப்பற்றிய பேருந்தினால் 41 பயணிகள் பாதிப்பு!

சனிக்கிழமை Pont-de-l’Arche (Eure) பிராந்தியத்தை ஊடறுக்கும் A13 நெடுஞ்சாலையில், தீப்பற்றிய பேருந்தில் இருந்து சாரதியின் துரித நடவடிக்கையினால் 41 பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. 41 bus passengers hit fire Pont-de-l’Arche regional

நெடுஞ்சாலையில் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்தின் பின் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. பேருந்தின் முன் பகுதியில் சமிக்ஞை விளக்கு எச்சரிக்கை ஒலி எழுப்ப, சாரதி பக்கத்து கண்ணாடி வழியே பேருந்தின் பின் பகுதியினை பார்த்துள்ளார்.

பேருந்தின் பின் பகுதியில் இருந்து புகை வெளியே வர, சாரதி துரிதமாக செயற்பட்டார். உடனடியாக பேருந்தை நிறுத்திவிட்டு, எவ்வித பதட்டமுமின்றி, அனைத்து பயணிகளையும் வெளியே வரச்செல்லி அழைத்தார்.

பேருந்துக்குள் எவ்வித பதட்டமான சூழ்நிலையும் ஏற்படாமல், இரண்டு சிறுவர்கள் 17 ஆண்கள், 22 பெண்கள் என மொத்தமாக 41 பேர் பேருந்தை விட்டு இறங்கினர். உடனடியாக பேருந்து மிக வேகமாக எரிந்துள்ளது.

அங்கிருந்த பயணிகள் அனைவரும் எவ்வித காயங்களும் இன்றி காப்பாற்றப்பட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தீயிணை அணைத்தனர்.

அதன் பின்னர் சாரதியின் துரித நடவடிக்கையால் அனைவரும் காப்பாற்றப்பட்டுள்ளமையை குறிப்பிட்டு பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Tamil

Recent Posts

இளம் வாலிபர் நிர்வாண கோலத்தில் வீதியில் நின்று கொண்டு தாக்குதல் நடத்திய சம்பவம்- காவற்துறையினர் மீதும் தாக்குதல்!

நபர் ஒருவர் முழு நிர்வாணமாக நான்கு காவல்துறையினரை தாக்கியுள்ள சம்பவமொன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. ஆனால் இத்தகவல் இன்று வெளியாகியுள்ளது. Nude Person attacked France police இச்சம்பவம், செவ்வாய்க்கிழமை…

7 hours ago

பிரான்ஸில் துப்பரவு பணியினால் தொடரும் உயிரிழப்புகள்!

நேற்று திங்கட்கிழமை Yvelines பகுதியில் 40 மீற்றர் ஆழத்தில் துப்பரவுபணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இருவர் பலியாகியுள்ளனர். 2 persons died duringg cleaning works France news திங்கட்கிழமை இரவு…

1 day ago

பிரான்ஸில், நடுராத்திரியில் சுரங்கத்திற்குள் மாட்டிக்கொண்ட 1400 பயணிகள்!

RER A சேவை செயலிழப்பு Charles de Gaulle-Etoile நிலையத்துக்கும் La Défense நிலையத்துக்கும் இடையே உள்ள சுரங்கத்துக்குள் இடம்பெற்றுள்ளது. புதன்கிழமை இரவு 11 மணிக்கு சுரங்கத்துக்குள்…

6 days ago

உத்தியோகபூர்வ குடியுரிமை பெற்ற பரிஸின் ஹீரோ!

சிறுமி ஒருவரை துணிச்சலாக காப்பாற்றியதால் பரிஸின் ஹீரோ என வர்ணிக்கப்படும் மமது கசாமாவை யாரும் மறந்திருக்க முடியாது. பிரிஞ்சி குடியுரிமை வழங்கப்படும் என ஜனாதிபதி கூறியதன் படி,…

6 days ago

பிரான்ஸ் வீதிகளில் திடீரென ஏற்பட்ட மாற்றம்!

பிரான்ஸில் இவ்வருட கோடை காலத்தில் ஏற்பட்ட வீதி விபத்துக்களில் பலி எண்ணிக்கை கணிசமாக மாற்றமடைந்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 15.5% வீதம் குறைவடைந்துள்ளது. France August month road…

7 days ago

பிரான்ஸில் இரு குழந்தைகள் கழுத்தில் வெட்டப்பட்டு கொலை… உயிருக்கு போராடும் மூன்றாவது குழந்தை!

இச்சம்பவம் Ain மாவட்டத்தின் Saint-Genis-Pouilly பகுதியில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 11) இடம்பெற்றுள்ளது. இரு சிறுமிகள் கத்தியால் வெட்டப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். Two children killed using knife France news…

1 week ago