Type to search

பிரான்ஸில் 12 ஆவது மாடியிலிருந்து விழுந்த சிறுமி!

France France Head Lines WORLD

பிரான்ஸில் 12 ஆவது மாடியிலிருந்து விழுந்த சிறுமி!

Share
  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares

ஆறு வயதான ஒரு சிறுமி பன்னிரெண்டாவது தளத்திலிருந்து தவறி விழுந்து உடல் சிதறி உயிரிழந்துள்ளார். 6 year old girl fell 12th floor france tamil news

இச்சம்பவம் மார்செ நகரின் 12 ஆவது வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுமி, தனது சகோதரர்களுடன் 12 ஆவது தளத்தில் உள்ள வீட்டின் பல்கனியில் விளையாடிக் கொண்டிருக்கும்போது, திடீரென அங்கிருந்து கீழே விழுந்துள்ளார்.

உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அங்கு பலத்த காயங்களுக்கு உள்ளான சிறுமியை மருத்துவமனையின் அவசர பிரிவில் சேர்த்து, சிகிச்சைக்கு உட்படுத்தினர். ஆனால் சிறுமி சில நிமிடங்களிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாள்.

இது தொடர்பான விசாரணைகளை மார்செ பகுதி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சிறுமி தவறி விழுந்துள்ளதாக எவ்விதத்திலும் உறுதி செய்ய முடியவில்லை என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். இச்சம்பவம் மார்செ பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares
Tags: