ஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்!
Share

செனட் சமீபத்தில் சர்ச்சைக்குரிய ரயில் சீர்திருத்தங்களை ஏற்றுக்கொள்ள வாக்களித்திருந்தாலும் கூட, ஜூலை மாதத்தில் அதன் வேலைநிறுத்தம் தொடரும் என்று ரயில் தொழிற்சங்கமான CGT Cheminots அறிவித்துள்ளது. France train strike continue July
ஜூன் இறுதி வரை வேலைநிறுத்தங்கள் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டன. ஜூன் 17 வரை உள்ளூர் மற்றும் தேசிய அளவில் வேலைநிறுத்தங்களை மேற்கொள்வதாக பொதுத்துறை ஊழியர்கள் சங்கமான CGT அறிவித்துள்ளது.
அத்துடன் இந்த மாதத்தில் ஏற்கனவே ரயில் தொழிலாளர்கள் உத்தியோகபூர்வ வேலைநிறுத்தங்களை ஜூன் 17-18, ஜூன் 22-23 மற்றும் ஜூன் 27-28 ஆகிய தேதிகளில் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது ஜூலை மாதமும் வேலைநிறுத்தங்கள் தொடரும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் உத்தியோகபூர்வ வேலைநிறுத்த முடிவு திகதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
CGT Cheminots இன் செயலாளரான Laurent Brun, வேலைநிறுத்த நடவடிக்கை அடுத்த மாதமும் தொடரும் என்று உறுதிப்படுத்தியுள்ளார். இது பற்றிய கூட்டு பேச்சுவார்த்தைகள் நேற்று (வெள்ளிக்கிழமை ஜூன் 15) இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
**Most Related Tamil News**
- பிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்!
- பிரான்ஸில் பயணிகளின் பிரச்சினைகளை குறைப்பதற்கு புதிய நடவடிக்கை!
- பிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்!
- இந்தி டைரக்டருக்கு வலை வீசிய பாலியல் சர்ச்சை நடிகை : விரைவில் டும்.. டும்.. டும்..!