லண்டனுக்கு செல்ல காத்திருந்தவர்கள் Dunkerque பகுதியிலிருந்து வெளியேற்றம்!
Share

நேற்று (செடம்பர் 6) Dunkerque நகரில் முகாமிட்டு தங்கிருந்த 500 வரையான அகதிகள் அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டுள்ளனர். 500 refugees discharge fromm Dunkerque France
இவர்கள் ஆங்கிலக் கால்வாய் ஊடாக பிரித்தானியா நோக்கி செல்ல தங்கியிருந்ததாகவும், இந்நிலையிலேயே நேற்று 539 அகதிகளை அதிகாரிகள் வெளியேற்றினர். காவல்துறை அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் தொண்டு நிறுவன அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உட்பட மொத்தம் 200 அதிகாரிகள் இந்த வெளியேற்றத்தில் ஈடுபட்டனர்.
இந்த அகதி முகாம் Grande-Synthe நகரில் அமைக்கப்பட்டிருந்தது. வெளியேற்றப்பட்ட 539 பேர்களில் 40 பேர் சிறுவர்கள் எனவும் 150 பேர் குடும்பத்தினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகதிகளில் 95 வீதமானவர்கள் ஈராக் மற்றும் குர்தீஸ் நாட்டு குடியுரிமை கொண்டவர்கள் எனவும், மிக அமைதியான முறையில் வெளியேற்றம் இடம்பெற்றது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, Grande-Synthe அகதி முகாமில் 800 வரையான அகதிகள் வசித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.